சினிமா செய்திகள்

பரத் -வாணி போஜன் படத்தின் டீசர் வெளியானது

Published On 2022-12-06 14:24 GMT   |   Update On 2022-12-06 14:24 GMT
  • நடிகர் பரத் நடிக்கும் 50-வது படம் ‘லவ்’.
  • இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.

பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் 'மிரள்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


லவ்

இவர் தற்போது 50-வது படமாக 'லவ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. திரில்லர் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


லவ்

ஆர்.பி.பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



Full View


Tags:    

Similar News