ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் மாமன்னன் படக்குழு
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்ட்டி வருகின்றனர்.
#MAAMANNAN @mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/stjrxl3h3O
— Udhay (@Udhaystalin) April 30, 2023