சினிமா செய்திகள்
null
உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த மாரிசெல்வராஜ்
- சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இவருக்கு வெற்றிமாறன், பா.இரஞ்சித் போன்ற பலர் ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், வெற்றிமாறன், பா.இரஞ்சித் போன்ற பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, 'மாமன்னன்' படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பகிர்ந்து "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" வாழ்த்துக்கள் அதிவீரன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.