சினிமா செய்திகள்
null

தவழ்ந்து வரும் கிருஷ்ணர்கள்.. நயன்தாரா பகிர்ந்த புகைப்படம் வைரல்

Published On 2023-09-07 11:23 IST   |   Update On 2023-09-07 11:25:00 IST
  • நடிகை நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் உள்ளன.
  • இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜவான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்பம் வெற்றி பெறுவதற்காக நயன்தாரா, ஷாருக்கான் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.


இவ்வளவு நாட்கள் சமூக வலைதளத்தில் நாட்டம் கொள்ளாத நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கினர். இதையடுத்து தன் குழந்தைகளுடன் கொண்டாடும் பண்டிகைகளின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில், தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகன்கள் உயிர் மற்றும் உலக்கிற்கு பட்டு வேட்டி அணிவித்து குட்டி கிருஷ்ணர்களாக அலங்கரித்து அவர்கள் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Full View

Tags:    

Similar News