சினிமா செய்திகள்
திரு.மாணிக்கமாக மாறும் சமுத்திரக்கனி
- இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் படம் திரு.மாணிக்கம்.
- திரு.மாணிக்கம் திரைப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படம் திரு.மாணிக்கம் என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. மாணிக்கம் என்ற ஒரு மனிதன் எப்படி திரு.மாணிக்கமாக உயர்கிறான் என்பதே இந்தப் படத்தின் அடிப்படைக் கதை.
தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்கப் படைப்புகளைத் தந்த முன்னணி இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரு. மாணிக்கம் படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.