வெற்றியே அடுத்ததை ஆரோக்கியமாக நகர்த்தும் சூத்திரம்.. சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்
- ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
- இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கிரிக்கெட் உயரத்திற்கு ஏணியாக பலர்… ஆனால் தோணியாக சென்னையை வெற்றியின் கரையில் சேர்ப்பதில் அவரே ஆகச் சிறந்தவர்.வெற்றிக்கு ஆயிரம் சூத்திரம் இருக்கலாம்.ஆனால் வெற்றியே அடுத்ததை ஆரோக்கியமாக நகர்த்தும் சூத்திரம்.மகிழ்ச்சி மழையில் csk ரசிகர்கள்!!!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Cricket உயரத்திற்கு ஏணியாக பலர்… ஆனால் தோணியாக சென்னையை வெற்றியின் கரையில் சேர்ப்பதில் அவரே ஆகச் சிறந்தவர்.வெற்றிக்கு ஆயிரம் சூத்திரம் இருக்கலாம்.ஆனால் வெற்றியே அடுத்ததை ஆரோக்கியமாக நகர்த்தும் சூத்திரம்.மகிழ்ச்சி மழையில் csk ரசிகர்கள்!!! pic.twitter.com/xdnOhcpwLq
— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 30, 2023