ஆண்ட்ரியா
கவனம் ஈர்க்கும் ஆண்ட்ரியா படத்தின் புதிய பாடல்
- இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
- இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.
பிசாசு 2
இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
பிசாசு 2
ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் பிரியங்கா குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Yet another Mesmerising Musical Treat from @DirectorMysskin #Pisasu2 #NenjaiKelu 2nd Single https://t.co/F7c27kU0rZ#KarthikRaja@PriyankaNKOffl#Kabilan@Rockfortent @VijaySethuOffl @Lv_Sri @actor_ajmal @shamna_kkasim @Actorsanthosh @kbsriram16 @APVMaran @saregamasouth
— Andrea Jeremiah (@andrea_jeremiah) August 25, 2022