படப்பிடிப்பில் காயம்.. பிரித்விராஜுக்கு அறுவை சிகிச்சை
- நடிகர் பிரித்விராஜ் ‘விலயாத் புத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் இயக்குனர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் 'விலயாத் புத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, மறையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படம் சந்தனக் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் பிரித்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து அவர் உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று (ஜூன் 26) நடிகர் பிரித்விராஜுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் சிகிச்சைக்கு பிறகு அவர் சில வாரங்கள் ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், முழுமையாக குணமடைந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.