சினிமா செய்திகள்
உலக கோப்பை அரையிறுதி போட்டியை காண மும்பை சென்றார் ரஜினி
- ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினி மும்பை சென்றுள்ளார். அதாவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.