சினிமா செய்திகள்

கேரளாவின் பிரபல பாடகி ரம்லா பேகம் காலமானார்

Published On 2023-09-28 12:00 IST   |   Update On 2023-09-28 12:00:00 IST
  • ரம்லா பேகம் தனது இசை பயணத்தை சிறுவயதிலேயே தொடங்கினார்.
  • இவர் ஏராளமான மலையாள இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

கேரள மாநிலத்தில் மாப்பிளப்பாட்டு பாடல்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல பாடகி ரம்லா பேகம் (வயது 86). வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோழிக்கோடு பரப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 1946-ம் ஆண்டு பிறந்த அவர், ரம்லா இந்தி பாடல்களை பாடியதன் மூலம் தனது இசை பயணத்தை சிறுவயதிலேயே தொடங்கினார். பின்பு ஆலப்புழாவில் உள்ள இசைக்குழுவில் இடம்பெற்றிருந்த அவர், ஏராளமான மலையாள இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

கேரள மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் கதாபிரசங்கம் கொடுத்த சாதனை ரம்லா பேகத்துக்கு உள்ளது. தடைகளை மீறி பல கோவில்களிலும் இவர் பாடியிருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட கேசட்டுகள், 35-க்கும் மேற்பட்ட கிராமபோன் இசைத்தட்டுகளிலும் பாடியுள்ள அவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News