சினிமா செய்திகள்

மீண்டும் இணைந்த விருது படக்குழு

Published On 2023-09-19 12:06 GMT   |   Update On 2023-09-19 12:06 GMT
  • ஏ. ஆதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விருது’.
  • இந்த படக்குழு தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஏ.டி.ஆதிநாடார் தயாரித்த முதல் படம் விருது. இந்தப் படம் வெளிவந்து தியேட்டர்களில் 40 நாள் வெற்றிகரமாக ஓடி லாபத்தை கொடுத்தது. இப்போது 'உலகநாதன்' என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் தயாரித்திருக்கிறார்கள்.


கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் கலந்த பேமிலி படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை மற்றும் இராஜபாளையத்தைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விருது படத்தை இயக்கிய ஏ. ஆதவன் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். விருது படத்தில் கதாநாயகனாக நடித்த அட்சயன் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகளும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.


மேலும், கஞ்சா கருப்பு, விஜய் டி.வி. புகழ் சசிகலா, வில்லனாக புதுமுக நடிகர் கடற்கரை மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகன் சிலம்பம் பயிற்சி முழுமையாக பெற்றவர் என்பதால் சிலம்பம் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் அவரே நடித்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கணேஷ் சாய் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News