சினிமா செய்திகள்

கமல்ஹாசன் - சு.வெங்கடேசன்

நடிகர் கமலுக்கு நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன்..

Published On 2023-01-03 10:20 GMT   |   Update On 2023-01-03 10:20 GMT
  • பிக்பாஸ் 6-வது சீசன் 84 நாட்களை நெருங்கியுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் வார இறுதியில் கமல் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரை செய்வார்.

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 84 நாட்களை நெருங்கியுள்ளது.


பிக்பாஸ்

பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் வார இறுதியில் கமல் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரை செய்வார். அதுபோன்று கடந்த வார இறுதியில் காவல் கோட்டம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் மதுரை பாராளுமன்ற தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நூலினை பரிந்துரை செய்தார்.


சு.வெங்கடேசன்

இதற்கு நன்றி தெரிவித்து சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்தகப் பரிந்துரை பகுதியில் திரைக்கலைஞரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான திரு. கமல்ஹாசன் வேள்பாரியை பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News