சினிமா செய்திகள்
null

5 வருட அலைக்கழிப்பு.. ஏ.ஆர்.ரகுமான் மீது பரபரப்பு புகார்

Published On 2023-09-27 17:22 IST   |   Update On 2023-09-27 17:32:00 IST
  • 'அசோசியேஷன்ஸ் ஆப் அறுவை சிகிச்சை இந்தியா' என்ற அமைப்பினர் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த நிகழ்ச்சி நடத்த அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு 'அசோசியேஷன்ஸ் ஆப் அறுவை சிகிச்சை இந்தியா' என்ற அமைப்பினர் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஏ.ஆர்.ரகுமானை புக் செய்து முதற்கட்டமாக ரூ. 29 லட்சத்தி 50 ஆயிரத்தை அசோசியேஷன் கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நடக்காததால் முதற்கட்டமாக கொடுத்த தொகையை அசோசியேஷன், ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்டுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். இந்த காசோலையை பல முறை வங்கியில் செலுத்தியும் பவுன்ஸ் ஆனதால் இது நிலுவையில் இருந்தது. ஏ.ஆர்.ரகுமானிடமும் அவரது மேலாளர் செந்திலிடமும் பல முறை இந்த நிறுவனம் தொகையை கேட்டுள்ளது.

கடந்த 5 வருடமாக ரூ. 29 லட்சத்தி 50 ஆயிரத்தை திருப்பி கொடுக்கப்படாமல் இருந்ததால் இது தொடர்பாக அந்த அசோசியேஷனின் அமைப்பு செயலாளர் விநாயகக் செந்தில் என்பவர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகாரில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News