சினிமா செய்திகள்

தலைவர் 169 - ஜெயிலர்

தலைவர் 169 படத்தின் பெயரை அறிவித்த படக்குழு

Published On 2022-06-17 06:06 GMT   |   Update On 2022-06-17 06:06 GMT
  • ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
  • இப்படத்தின் பெயரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தலைவர் 169 படம் பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதமாக மாறியிருந்தது. இருந்தும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

"ஜெயிலர்"

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி தலைவர் 169 படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயிரடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News