null
சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த ஆர்யா.. வைரலாகும் புகைப்படம்..
- இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
- இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன்
இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.
இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் ஆர்யா நடிப்பைத் தாண்டி சைக்கிளிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் லண்டனில் நடைபெறவுள்ள சைக்கிள் போட்டியில் ஆர்யா தனது குழுவினருடன் கலந்து கொள்ளவுள்ளார்.
சூர்யா - ஆர்யா
இந்நிலையில் ஆர்யா அணியின் ஜெர்ஸியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இதனை ஆர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
I am so grateful @Suriya_offl sir for unveiling our team jersey #LEL2022 🤗🤗Thank you so much for your encouragement ,love and support for our #Ryders team as always 😍🤗@BoomCarsChennai @GoedTravels #Heini #Ryders @madraspf pic.twitter.com/QfIERwBMUE
— Arya (@arya_offl) August 4, 2022