நடிகர் சமுத்திரக்கனியின் அலுவலகத்தில் புகுந்த மர்ம பெண்.. விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்..
- தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி.
- இவரின் அலுவலகத்தில் மர்ம பெண் ஒருவர் புகுந்துள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியின் அலுவலகம் மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 10-வது தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் மர்ம பெண் ஒருவர் புகுந்துள்ளார். அவர் அலுவலக வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி அங்கிருந்த மழை கோட்டை எடுத்து போட்டுக் கொண்டு சென்றுள்ளார்.
சமுத்திரக்கனி
அலுவலகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. அலுவலக ஊழியர்கள் இதுபற்றி சமுத்திரக்கனியின் மானேஜர் விவேக்குக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சமுத்திரக்கனி
இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து சமுத்திரக்கனியின் அலுவலகத்தில் புகுந்த பெண் யார்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.