ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த தனுஷ் பட பாடல்
- இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’.
- இப்படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியானது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
வாத்தி
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'வாத்தி' படத்தின் இரண்டாவது பாடலான 'நாடோடி மன்னன்' பாடல் நேற்று வெளியானது.
வாத்தி போஸ்டர்
இந்நிலையில், இப்பாடல் வெளியான ஒரே நாளில் யூ டியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 'வாத்தி' திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
1 Million+ Views & Counting for #NaadodiMannan the wayfarer anthem ?
— Sithara Entertainments (@SitharaEnts) January 18, 2023
Trending #? on #YouTube - https://t.co/plfolxdVZp
? @gvprakash
? @anthonydaasan
? #YugaBharathi #Vaathi @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @7screenstudio pic.twitter.com/xq4EGSbSY0