விஜய் மக்கள் இயக்கம்
விஜய் கல்வி விருது வழங்கும் விழா.. அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்
- விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார்.
- இந்த விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.
விஜய்
தற்போது விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்
இந்நிலையில் விருது பெறும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் பெற்றோர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அடையாள அட்டை மாவட்ட தலைவர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.