சினிமா செய்திகள்
பிகினி உடையில் விஜய் பட நடிகை.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்
- பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமீஷா பட்டேல்.
- இவரின் கவர்ச்சி உடை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் நடித்து 2003-ல் வெளியான புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 46 வயதாகும் அமீஷா படேலுக்கு கவர்ச்சி படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதே வழக்கம்.
இந்நிலையில் புதிய பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் வீடியோவை அமீஷா பட்டேல் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.