பிரதீப் ரங்கநாதன்
null
விஜய் பட டைட்டிலை கைப்பற்றிய கோமாளி இயக்குனர்
- கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன்.
- இவர் இயக்கியுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து நல்ல வரவேற்பை படைத்தது.
இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
லவ் டுடே
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலை இப்படத்திற்கு சூட்டியுள்ளனர். இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
#LoveToday
— Pradeep Ranganathan (@pradeeponelife) July 3, 2022
Thanks to wonderful #Ags ❤️ for this movie.
Dedicating this movie to the girl who left me. @Ags_production #KalpathiSAghoram #KalpathiGanesh #KalpathiSuresh @thisisysr @archanakalpathi @aishkalpathi @venkat_manickam
Wait for it :) pic.twitter.com/hkRZ8DrsXP