கிரிக்கெட் (Cricket)
null
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் ஜீவா, வெங்கட் பிரபு
- சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது
- இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.