ஒரே ஓவரில் 11 பந்துகள்.. மோசமான சாதனை படைத்த முகமது ஷமி
- முதல் ஓவர் வீசிய முகமது ஷமி அந்த ஓவரில் 5 வைடு பந்துகளை வீசினார்.
- சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் 124 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ரன்னிலும் கில் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
முன்னதாக இப்போட்டியில் முதல் ஓவர் வீசிய முகமது ஷமி அந்த ஓவரில் 5 வைடு பந்துகளை வீசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் (11) வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கான் உடன் முகமது ஷமி சமன் செய்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜாகீர் கான் ஒரு ஓவரில் 11 பந்துகளும் 2006 ஆம் ஆண்டு இர்பான் பதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 11 பந்துகளும் வீசி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.