null
ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச்கள் பிடித்த இந்திய வீரர்.. புதிய சாதனை படைத்த விராட் கோலி
- சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
- இப்போட்டியில் விராட் கோலி 2 கேட்சுகளை பிடித்தார்
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் 67 ரன்கள் எடுத்துள்ளது. ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சில் கேப்டன் ரோகித் அவுட்டானார்.
முன்னதாக இப்போட்டியில் விராட் கோலி 2 கேட்சுகளை பிடித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச்கள் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
விராட் கோலிக்கு அடுத்தபடியாக அசாருதின் 156 கேட்சுகளும் சச்சின் 140 கேட்சுகளும் ட்ராவிட் 124 கேட்சுகளும் ரெய்னா 102 கேட்சுகளும் பிடித்துள்ளனர்.
மேலும், சர்வதேச அளவில் அதிக கேட்ச் பிடித்தவர்களின் பட்டியலில் ஜெயவர்த்தனே (218), ரிக்கி பாண்டிங் (160) ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இடத்தில விராட் கோலி உள்ளார்.