விஜய்சேதுபதி 50-வது படம் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
- நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.
- இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மகாராஜா போஸ்டர்
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'மகாராஜா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நாளை வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
#MaharajaFirstLook is releasing on Sep 10th. #Maharaja @Dir_nithilan @PassionStudios_ @TheRoute @Jagadishbliss @Sudhans2017 @anuragkashyap72 @Natty_Nataraj @mamtamohan @ThinkStudiosInd @jungleeMusicSTH #VJS50FirstLook #VJS50 #PassionAndRoute pic.twitter.com/W3pSARFR8O
— VijaySethupathi (@VijaySethuOffl) September 8, 2023