சினிமா செய்திகள்

2018 பட இயக்குனருடன் இணையும் விக்ரம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published On 2023-08-02 08:13 GMT   |   Update On 2023-08-02 08:13 GMT
  • நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

மலையாளத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடித்து வரவேற்பை பெற்ற 'ஓம் சாந்தி ஓசானா', மற்றும் 'ஒரு முத்தஸி கதா', 'சாராஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப். இவர் தற்போது '2018' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.


இந்த படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.


விக்ரம்- ராஷ்மிகா- ஜூட் ஆந்தனி ஜோசப்

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கும் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News