ஆதரவற்ற முதியவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஷால்
- 'மார்க் ஆண்டனி' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- விஷால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆதரவற்ற முதியவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்
இதையடுத்து நடிகர் விஷால் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் தனது பிறந்த நாளை ஆதரவற்ற முதியோர்களுடன் கொண்டாடியுள்ளார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "பெரியவர்கள் வாழ்த்தும் போது கடவுள் நேரில் வந்து வாழ்த்துவது போன்று இருக்கிறது. எங்கள் அறக்கட்டளை சார்பாக முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறோம்" என்று பேசினார்.