சொன்னதை செய்த விஷால்.. படப்பிடிப்பு தளத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
- விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமபந்தி கறி விருந்து அளித்த விஷால்
இந்நிலையில், நடிகர் விஷால் படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்துள்ளார். அதாவது, தீபாவளி பண்டிகையொட்டி 'விஷால் 34' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால், படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் விஷால் சார்பில் சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்க வேண்டும் என்று கூறி வரும் நடிகர் விஷால், அதை செயல்படுத்தி உள்ளார்.