இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஷால்.. விரைவில் வெளியாகும் டீசர்
- நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷால் பதிவு
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, காரைக்குடியில் நடைபெற்ற 'விஷால் 34' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் விரைவில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
Last shot and we had God's blessings in the form of rain. Wat a way to complete the second long schedule in Karaikudi for my film #Vishal34 in Hari sir's direction produced by @stonebenchers.
— Vishal (@VishalKOfficial) October 18, 2023
Teaser and First look to be out very soon. God bless @stonebenchers pic.twitter.com/e6kY1U5GC5