சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை படமான சாவ்வா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
- ராஷ்மிகா மந்தன்னா சாவ்வா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் மராத்திய மன்னன் சாம்பாஜி மகாராஜ் வாழ்க்கை கதையாகும்.
சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது புஷ்பா 2 திரைப்படம். இப்படத்தில் ராஷ்மிகா மந்தன்னா கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார். அடுத்ததாக ராஷ்மிகா மந்தன்னா சாவ்வா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மராத்திய மன்னன் சாம்பாஜி மகாராஜ் வாழ்க்கை கதையாகும். சம்பாஜி மகாராஜ் கதாப்பாத்திரத்தில் விக்கி கவுஷல் நடித்துள்ளார். அவரது மனைவியாக ராஷ்மிகா மந்தன்னா மகாராணி யேசுபாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் பாடலான ஜானே டு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பாடகரான அர்ஜித் சிங் பாடியுள்ளார் பாடலின் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இப்படத்தை லக்ஸ்மன் உதேகர் இயக்கியுள்ளார். இப்படம் 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொண்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.