விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் டீசர் டிராக் இன்று வெளியாகிறது
- விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.
கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் டிராக்கை அனிருத் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியிடவுள்ளார். இதனை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.