Lovely படத்தின் Craziness வீடியோ பாடல் வெளியானது
- நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ்.
- இப்படம் 3டியில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ்.மலையாள நடிகரான இவர் அடுத்ததாக லவ்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 4 தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை திலீஷ் கருணாகரன் இயக்கியுளார். இவர் இதற்கு முன் சால்ட் அன் பெப்பர், இடுக்கி கோல்ட் மற்றும் மாயநதி படங்களுக்கு இணை எழுத்தாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் 3டியில் வெளியாக இருக்கிறது. இது ஒரு ஃபேண்டசி நகைச்சுவை திரைப்படமாக அமைந்துள்ள்து. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஈ- பேசுவது கதாநாயகனான மாத்யூவிற்கு மட்டும் கேட்கிறது. அந்த லவ்லி என்ற ஈ- க்கும் மாத்யூக்கும் உள்ள நகைச்சுவை காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது. டிரெய்லரில் வரும் சில காட்சிகள் நான் ஈ திரைப்படத்திற்கு ஒற்றுப்போகிறது.
இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற கிரேசினஸ் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கே.எஸ் ஹரிசங்கர் மற்றும் விஷ்ணு விஜய் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை சுஹைல் கோயா எழுதியுள்ளார்.
இப்படத்தில் உன்னிமாயா பிரசாத், மனோஜ், அஸ்வதி ராமசந்திரன், பிரஷாந்த் முரளி, பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.