சினிமா செய்திகள்

எவடே சுப்ரமண்யம்? படத்தால் மட்டுமே நான் இன்று சினிமாவில் இருக்கிறேன் - விஜய் தேவரகொண்டா

Published On 2025-03-17 08:21 IST   |   Update On 2025-03-17 08:21:00 IST
  • இப்படத்தின் மூலமே விஜய் தேவரகொண்டா நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

2015 ஆம் ஆண்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் நானி, மாளவிகா நாயர், விஜய் தேவரகொண்டா மற்றும் ரித்து வர்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது எவடே சுப்ரமண்யம்? திரைப்படம். இப்படத்தின் மூலமே விஜய் தேவரகொண்டா நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 18 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Full View

திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை வரும் மார்ச் - 21 ஆம் தேதி படக்குழு ரீரிலீஸ் செய்கிறது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு சமீபத்தில் எவடே சுப்ரமண்யம் படத்தில் நடித்த அனைவரும் ஒன்றுக்கூடி 10 வருட நிறைவை கொண்டாடினர். அதில் விஜய் தேவரகொண்டா மற்றும் நானி இருவருக்கும் இடையே உள்ள அந்த நட்பை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. விஜய் இப்படத்தில் நடித்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

10 வருடங்களுக்கு பிறகு திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Full View

இப்படம் தமிழில் டப் செய்ப்பட்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் யார் இந்த மணி? என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News