தமிழகத்தில் இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு அனுமதி
- இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் இந்தியன் 2. நாளை (ஜூலை 12) வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியன் 2 படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை ஒருநாள் மட்டும் ஐந்து காட்சிகள் வரை திரையிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. முன்னதாக வெளியான திரைப்படம் ஒன்றின் சிறப்பு காட்சி கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
லைகா நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.