சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் அனிருத்துக்கு அபராதம் விதித்த போலீசார்

Published On 2025-02-07 07:34 IST   |   Update On 2025-02-07 07:34:00 IST
  • போக்குவரத்து போலீசாரிடம் ரூ.1,000 அபராதம் செலுத்தி அனிருத் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
  • அனிருத்துக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்று காட்டுத்தீயாக பரவியது.

அஜித்குமார் நடித்த 'விடாமுயற்சி' படம், நேற்று வெளியானது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் நடிகை திரிஷா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் படத்தை பார்த்தனர். ரசிகர்களிடமும் வாழ்த்துகளை பெற்றனர்.

இந்த படம் பார்த்து வெளியே வந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததால் அவர் அதிர்ச்சி அடைந்து போனார். படம் பார்க்க வந்தபோது தனது காரை 'நோ பார்க்கிங்' பகுதியில் அவர் நிறுத்தி இருந்தது தான் இதற்கு காரணம். இதையடுத்து போக்குவரத்து போலீசாரிடம் ரூ.1,000 அபராதம் செலுத்தி அனிருத் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அனிருத்துக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்று காட்டுத்தீயாக பரவியது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News