சுந்தர்.சி நடித்த `வல்லான்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
- வல்லான் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
- வல்லான் திரைப்படத்தை மணி சேயோன் இயக்கியுள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியானது மத கஜ ராஜா திரைப்படம். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுந்தர் சி -க்கு திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்த வல்லான் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இப்படத்தை VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் பிரம்மாண்டமாக தயாரிக்க,மணி சேயோன் இயக்கியுள்ளார். சுந்தர் சி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். திரைப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்