OTT

சமுத்திரகனி நடித்த திரு.மாணிக்கம் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

Published On 2025-01-21 15:37 IST   |   Update On 2025-01-21 15:37:00 IST
  • இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிய படம் திரு. மாணிக்கம்.
  • சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிய படம் திரு. மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

திரைப்படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்களான ரஜினிகாந்த், சிவக்குமார், அமீர், லிங்குசாமி மற்றும் பல பாராட்டினர். இந்த காலத்திலும் ஒரு மனிதன் நேர்மையாக வாழ முடியுமா? என்ற கேள்வியை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி ஸ்ட்ரீமாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News