இந்த வார ஓடிடியில் என்ன பார்க்கலாம் ?
- சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஜாலியோ ஜிம்கானா'.
- எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகிய தொடர் 'உப்பு புளி காரம்'.
ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பார்க்கலாம் என இந்த செய்தியில் காணலாம்.
'ஜாலியோ ஜிம்கானா'
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஜாலியோ ஜிம்கானா'. இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தப்படத்தினை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இறந்துப்போன பிரபுதேவாவின் உடலை ஒரு இடத்தில் சென்று ஒப்படைக்க முயற்சிக்கும் 4 பெண்களின் கதையாக இப்படம் அமைந்துள்ளது. இப்படம் கடந்த 30-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ரீயூனியன்'
'ரீயூனியன்' என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மாளிகையில் நடைப்பெற்ற கொலையை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்ட மர்மம் மற்றும் நகைச்சுவை கலந்த படமாகும். இந்த படத்தில் நினா டோப்ரேவ், ஜேமி சுங், சேஸ் க்ராபோர்ட், பில்லி மேக்னுசென் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் மீண்டும் இணைந்து, அந்த கொலையை செய்த கொலைகாரனை கண்டுபிடிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் கடந்த ஜனவரி 1-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'தி பிளாக் ஸ்விண்ட்லர்'
ஜப்பானின் 'மங்கா' தொடரை அடிப்படையாகக் கொண்டு, குரோசாகி என்ற பெயரிடப்பட்ட கதாபாத்திரம், தனது குடும்பத்தை ஏமாற்றி மோசடி செய்பவர்களை பழிவாங்கும் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 1-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'உப்பு புளி காரம்'
எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகிய தொடர் 'உப்பு புளி காரம்'. இத்தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, பரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர்களை அடுத்து ஒளிபரப்பான உப்பு, புளி, காரம் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தொடரின் இறுதி எபிசோடு கடந்த 2 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஆல் வி இமேஜின் அஸ் லைட்'
பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்". இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்றது. இந்த நிலையில் இப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
'ஆரகன்'
இயக்குனர் அருண் கே ஆர் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா என பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'ஆரகன்'. இப்படத்தினை தயாரிப்பாளர் ஹரிகரன் பஞ்சலிங்கம் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் இசையமைத்துள்ளார். புராண கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
கடகன்
கேரள மாநிலத்தில் உள்ள நிலம்புர் பகுதியில் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படத்தை சஜில் மம்பத் இயக்கியுள்ளார். ஹகீம் ஷாஜஹான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மணல் கடத்தலை மையப்படுத்தி இக்கதைக்களம் அமைந்துள்ளது. இப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.