சினிமா செய்திகள்
'துணிவை' தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் வெளியானது - ரசிகர்கள் உற்சாகம்
- விஜய் நடித்த வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியானது.
- நள்ளிரவில் நடிகர் அஜித்தின் துணிவு படம் ரிலீசானது.
சென்னை:
நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் உலகம் முழுவதும் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியானது.
இந்நிலையில், வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது.
நள்ளிரவில் அஜித்தின் துணிவு ரிலீசான நிலையில், தற்போது விஜய்யின் வாரிசும் ரிலீசானதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.