null
விஜய் பற்றிய கேள்வி.. அவர் முதலில் செய்தியாளர்களை சந்திக்கட்டும் - விஷால்
- சமூக சேவை செய்ய மனதில் தைரியம், ஆசை யாருக்கெல்லாம் இருக்கோ அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம்.
- மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது.
சென்னை கோடம்பாக்கத்தில் விஷால் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் இல்ல நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பங்கேற்றார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கூறுகையில்,
விஜய் முதலில் செய்தியாளர்களை சந்திக்கட்டும். அவர் செய்தியாளர்களை சந்தித்தால் நீங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் வரும். சமூக சேவை செய்ய மனதில் தைரியம், ஆசை யாருக்கெல்லாம் இருக்கோ அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம்.
எல்லா பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அப்படி நீங்க மும்மொழியை ஒழிக்கணும்னா எல்லா பள்ளிகளிலும் ஒழிக்கணும்.
மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது வெற்றி அடையாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி. பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களுக்கு வாழ்த்துகள். நல்ல படிங்க என்றார்.
மேலும், சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் போல் மேலே கை காமித்து, நல்லதா நடக்கும் என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.