பாலா சார் இல்லன்னா .. நான் இங்க இல்ல - நெகிழ்ச்சியான சூர்யா
- பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான்.
- படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
தன் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை சிறையில் இருந்து வெளிவந்து பழி வாங்கும் கதையாக அமைந்துள்ளது வணங்கான் திரைப்படத்தின் கதைக்களம்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை வி கவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதே விழாவில் இயக்குனர் பாலாவின் திரையுலக பயணம் 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடினர். இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டனர்.
நடிகர்களான சூர்யா, சிவக்குமார், அருண் விஜய், கருணாஸ், சிவகார்த்திகேயன், கதிர், மன்சூர் அலிகான் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
அதில் பேசிய சூர்யா " நந்தா திரைப்படம் இல்லை என்றால் நான் இல்லை. நந்தா திரைப்படத்தை பார்த்து கௌதம் காக்கா திரைப்படத்திற்கு அழைத்தார். அதற்கு அடுத்து சஞ்சய் ராமசாமி கதாப்பாத்திரம் எனக்கு கிடைத்தது. எல்லாதிர்க்கும் காரணம் பாலா அண்ணன் தான். அதை தொடர்ந்து 'சேது' படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நடிகர் நடிக்கமுடியுமா, இயக்குநர் இப்படி இயக்க முடியுமா என்று 100 நாள் எனக்குள் 'சேது' படத்தின் தாக்கம் இருந்தது. 2000-ம் ஆண்டு நெய்காரன்பட்டியில் ஷூட்டிங்கில் இருந்தபோது எனக்கு ஒரு போன் கால் வந்தது. அதில், 'அடுத்தப் படத்தை உன்னை ஹீரோவாக வைத்து பண்ணுகிறேன்' என்று பாலா சார் சொன்ன ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றியது.
அருண் விஜய்க்கு இப்படம் மிகப்பெரிய படமாக அமைய வாழ்த்துக்கள் " என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.