இந்த ரிலேஷன்ஷிப்-ல பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியல டா - Mr.Housekeeping டிரெய்லர் வெளியனது
- மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஹரி பாஸ்கர்.
- மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனலின் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரி பாஸ்கர். அடுத்ததாக மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஹரி பாஸ்கருக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லரின் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. லாஸ்லியா மற்றும் ஹரி பாஸ்கர் இடையே காதல், மோதல், நட்பு, சண்டை, பிரிவு என அனைத்தும் டிரெய்லரில் அமைந்துள்ளது. படத்தின் ஓவர்சீஸ் உரிமையை ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.