null
Beep Mode-ல் பேசிய மிஷ்கின்.. குலுங்கி சிரித்த பிரபலங்கள்.. முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்
- பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா
- திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா." பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது மிகவும் சர்ச்சையாக தற்பொழுது மாறியுள்ளது.
மிஷ்கின் அதில் " குடி ஒரு மனிதனுக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஒரு விஷயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அவனுக்கு உதவுகிறது. ஒரு நபர் குடிக்கு அடிமையானால் அதில் நம் பங்கும் அடங்கி இருக்கிறது. இந்த சமுதாய பங்கும் அதில் முக்கிய பங்கு வகுக்கிறது. இப்படி நல்ல கருத்துகளை பேசிய மிஷ்கின். அவ்வப்போது மேடையில் அநாகரீகமாக காது கூசும் அவ சொற்களை பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார்.
`இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான் பாரு. இங்க மனிதர்கள அதிகமா குடிகாரனா ஆக்குனது இளையராஜா தான்". என உரிமையாக ஒருமையில் பேசினார். மனிதர்கள் எப்பொழுதும் ஒரு தராசை வைத்து மற்ற மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருக்கோம் என கூறும் போது பல காது கூசும் வார்த்தைகளை பயன்படுத்தினார். இவர் பேசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு பெரிய மதிப்புள்ள இயக்குனர் மேடையில் இவ்வாறு பேசுவது தவறானது என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனை இவர் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தாரா? என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.