சினிமா செய்திகள்

இயக்குநர் அவதாரம்.. முதல் படத்திலேயே விருது வென்று அசத்திய தேவயானி

Published On 2025-01-20 21:47 IST   |   Update On 2025-01-20 21:47:00 IST
  • நடிகை தேவயானி இதுவரை 100 திரைப்படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.
  • இப்படத்திற்கு இசையை இளையராஜா மேற்கொண்டுள்ளார்.

நடிகை தேவயானி இதுவரை 100 திரைப்படத்திற்கும் மேல் நடித்துள்ளார். 90ஸ் களின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் நடிகை தேவயானி தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

"கைக்குட்டை ராணி" என்ற குறும்படத்தை முதன்முறையாக இயக்கி, எழுதி, தயாரித்துள்ளார் தேவயானி. இந்த குறும்படம் 17-வது ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைக்கான குறும்படம் என்ற விருதை வென்றுள்ளது. இப்படத்திற்கு இசையை இளையராஜா மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை பி.லெனின் செய்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ராஜன் மிர்யாலா மற்றும் ஒலி வடிவமைப்பை லட்சுமி நாரயணன் மேற்கொண்டுள்ளார்.

20 நிமிடமான இந்த குறும் படம். ஒரு சிறுமி அவளது தாயை இழந்த பிறகு அவள் எதிர்க்கொள்ளும் சூழலை இப்படம் பிரபளித்து காண்பித்து மிகவும் எமோஷனலாக அமைந்துள்ளது. இதனை நடிகர் சரத்குமார் தேவயானியை பாராட்டி அவரது சமூக வலைத்தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

"தோழி நடிகை தேவயானி அவர்களுக்கு ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

முதல்முயற்சியில் வெற்றி பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துகள். உங்களுடைய கலைப்பயணத்தில் மற்றொரு மைல்கல் அத்தியாயமாக தொடரட்டும் உங்கள் இயக்குனர் பணி." என கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News