சினிமா
நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் சாண்டி, சுருதி செல்வம் நடிப்பில் உருவாகி வரும் மூணு முப்பத்தி மூணு படத்தின் முன்னோட்டம்.
பிரபல நடன இயக்குனரான சாண்டி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘3:33’. டி.ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்தை நம்பிக்கை சந்துரு இயக்கி உள்ளார். இதில் சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இதில் பாடல்கள் இல்லையாம்.
படத்தை பற்றி இயக்குனர் நம்பிக்கை சந்துரு கூறியதாவது: வழக்கமான பேய் படங்களை விட முற்றிலும் மாறுபட்டு திக்... திக்... என திகில் கலந்த படம் இது. திக் திக் என காட்சிக்கு காட்சி திகில் அதிகரித்துக்கொண்டே போகும். படத்துக்காக மாங்காடு அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, அதை பேய் பங்களாவாக மாற்றினோம். பெரும்பகுதி காட்சிகள் அந்த பங்களாவுக்குள்ளேயே படமாக்கப்பட்டன. படத்தை இயக்கியிருப்பதுடன், டாக்டர் வேடத்தில் நடித்தும் இருக்கிறேன்” என்கிறார்.