ஆன்மிக களஞ்சியம்

அமாவாசையிலும் சந்திரோதயம் காட்டி அருளிய அன்னை

Published On 2024-08-20 11:02 GMT   |   Update On 2024-08-20 11:02 GMT
  • ஒருநாள், தஞ்சை மன்னன் வந்த போது, பட்டர் அமாவாசையைப் பவுர்ணமி என்று கூறினார்.
  • அன்னை அபிராமி தன் திருச்செவியில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி வானத்தில் வீசி எறிந்தாள்.

அன்னை அபிராமி கண்கண்ட தெய்வம், அழகுக்கொரு வரும் ஒவ்வாத செல்வி, சின்னஞ்சிறு பெண்ணுருவில் திகழும் உத்தமி, எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் ஈன்றருளும் வள்ளல் நாயகி, அபிராமி பட்டர் என்ற அன்பருக்கு அமாவாசையிலும் சந்திரோதயம் காட்டி, அபிராமி அந்தாதி என்னும் பாமாலை சூட்டிக் கொண்ட செல்வி.

அன்னை அபிராமியினிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் பட்டர் ஒருவர், பக்தி முற்ற முற்ற அவர் உன் மத்மராகவே ஆகிவிட்டார்.

அதைக் கண்ட அர்ச்சகர்கள், அவரை வெறுத்தது மட்டுமின்றி அவர் மீது பொறாமையும் கொண்டனர்.

ஒருநாள், தஞ்சை மன்னன் வந்த போது, பட்டர் அமாவாசையைப் பவுர்ணமி என்று கூறினார்.

அதைக் கொண்டே அர்ச்சகர்கள் அவரைப் பற்றிப் பலவாறாகப் பேசினர்.

பட்டர் தமது தவறை உணர்ந்து, "உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று பாடத் தொடங்கி, எழுபத்தெட்டு பாடல்களைப் பாடி முடித்து, எழுபத்தொன்பதாவது பாடலை,

"விழிக்கே அருளுண்டு அபிராம

வல்லிக்கு" வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு

எமக்கு, அவ்வழி கிடக்க

பழிக்கே சுழன்று வெம்

பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர்

தம்மொடு என்ன கூட்டு இனியே"

என்று பாடினார்.

தயவர் தம்மொடு என்ன கூட்டு இனியே என்று அவர் பாடி முடித்த வேளையில், அன்னை அபிராமி தன் திருச்செவியில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி வானத்தில் வீசி எறிந்தாள். அந்தத் தோடே வான வெளியில் முழு மதியாகக் காட்சியளித்தது.

அமாவாசையன்றே பவுர்ணமி நிலவு உதிப்பதைக் கண்டு மன்னர், அர்ச்சகர்கள் எல்லோரும் வியந்து நின்றனர். பட்டரின் திருவடியில் விழுந்து வணங்கி மன்னிப்பு வேண்டினர்.

பட்டர் இவ்வாறு பாடிய அந்தாதிப் பாடல்களைக் கொண்டதே அபிராமி அந்தாதி, அபிராமியின் அருள் பெற்ற அந்தப் பட்டர், அபிராமி பட்டர் என்ற பெயரால் அதுமுதல் அழைக்கப்பெற்றார்.

அந்த அந்தாதிப் பாடல்கள் அன்னையை வழிபடுவதற்கேற்ற அற்புதப் பாடல்களாகும்.

Tags:    

Similar News