ஆன்மிக களஞ்சியம்

திருக்கடையூர் ஆலய திருப்பணிகள் செய்த காரி நாயனார்

Published On 2024-08-20 11:45 GMT   |   Update On 2024-08-20 11:45 GMT
  • இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பெரும் நிதியை அள்ளி, அள்ளி கொடுத்தனர்.
  • அந்த நிதியை கொண்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திருப்பணிகள் செய்து புதுப்பித்தார்.

காரி நாயனார் திருக்கடவூர் தலத்தில் பிறந்தவர். இவர் ஒரு மிகச்சிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களும் தங்களது வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோளைக் கடைப்பிடித்து வந்தனர்.

அதுபோலவே காரிநாயனாரும் ஒரு புதுமையான செயலைச் செய்தார்.

தமது தமிழ் புலமையால் "காரிக்கோவை" என்ற ஓர் அற்புதமான நூலை இயற்றினார்.

அந்த காலத்தில் புலவர்களை அரசர்கள் பெரிதும் மதித்துப் போற்றி வந்தனர்.

காரியாரும் தாம் இயற்றிய காரிக்கோவையை எடுத்துக்கொண்டு சேரன், சோழன், பாண்டியன் ஆகிய தமிழ் மூவேந்தர்களிடமும் சென்றார்.

நூலின் சிறப்பை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பெரும் நிதியை அள்ளி, அள்ளி கொடுத்தனர்.

அந்த நிதியை கொண்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திருப்பணிகள் செய்து புதுப்பித்தார்.

இவ்வாறு சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்து இறுதியில் காரி நாயனார் சிவனடி சேர்ந்து முக்தி அடைந்தார்.

Tags:    

Similar News