ஆன்மிக களஞ்சியம்
null

குங்குலியக்கலய நாயனாரின் பக்திக்கு இணங்கி நிமிர்ந்த லிங்கம்

Published On 2024-08-20 11:30 GMT   |   Update On 2024-08-21 07:51 GMT
  • ஒரு சமயம், திருப்பனந்தாளில் பக்தை மாலை அணிவிப்பதற்காக தலையைச் சாய்த்தார் சிவபெருமான்.
  • வளைந்திருந்த சிவலிங்கத்தை நிமிர்த்த சோழ மன்னன் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.

குங்குலியக்கலய நாயனார் திருக்கடவூர் ஆலயத்தில் தினமும் குங்குலிய தூபம் இடும் தொண்டு புரிந்து வந்தார். இறைவன் சோதனையால் அவருக்கு வறுமை ஏற்பட்டது.

அவரது மனைவி ஒரு நாள் திருமாங்கல்யத்தை கழற்றி கொடுத்து நெல் வாங்கி வரும்படி கூறினார்.

குங்குலியக்கலய நாயனாரும் அந்த தாலியை வாங்கிக்கொண்டு கடை வீதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே குங்குலிய வியாபாரி வருவதைக் கண்டார்.

உடனே அவருக்கு அமிர்த கடேசுவரருக்கு குங்குலியம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

மறு வினாடி எதை பற்றியும் யோசிக்காத அவர் தன் கையில் இருந்த தன் மனைவியின் தாலியைக் கொடுத்துக் குங்குலியம் வாங்கிக்கொண்டு நேராகக் கோவிலுக்கு சென்று விட்டார்.

சிவபெருமானின் அருளால் வீட்டில் செல்வம் நிறைந்தது.

ஒரு சமயம், திருப்பனந்தாளில் பக்தை மாலை அணிவிப்பதற்காக தலையைச் சாய்த்தார் சிவபெருமான்.

வளைந்திருந்த சிவலிங்கத்தை நிமிர்த்த சோழ மன்னன் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.

எத்தனையோ பேர் முயன்றும் லிங்கத்தை நிமிர்த்த முடியவில்லை.

இதனால் எல்லாரும் குங்குலியக்கலய நாயனார் உதவியை நாடினார்கள்.

திருப்பனந்தான் சென்ற அவர் ஒரு பட்டுக்கயிற்றால் லிங்கத்தைக் கட்டித் தம்முடைய கழுத்தில் மாட்டிக்கொண்டு இழுத்தார்.

குங்குலியக் கலய நாயனாரின் அன்புக்குக் கட்டுப்பட்ட சிவபெருமான் சாய்ந்த நிலையிலிருந்து நிமிர்ந்தார்.

இத்தகைய சிறப்புடைய குங்குலியக்கலய நாயனார் கடைசி வரை திருக்கடையூரில் வாழ்ந்து அமிர்த கடேசுவரருக்கு சேவை புரிந்தார்.

Tags:    

Similar News