ஆன்மிகம்
திருப்பங்கள் தரும் திருவாதிரைமங்கலம் சிவன்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவாலயம் திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது.
சோழநாட்டின் தேவார வைப்புத்தலம், சோழர்கள் எழுப்பி, மராட்டியர்கள் திருப்பணி செய்த கோவில், முட்புதரில் மறைந்திருந்த கோவிலை 82 வயது சிவனடியார் திருப்பணி செய்த ஆலயம், திருப்புமுனை, திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவாலயம்.
தொன்மைச் சிறப்பு
திருவாதிரை மங்கலம், பழமையான சிவாலயம் என்பதை, திருநாவுக்கரசர் இத்தலத்தை தேவாரத்தில் வைப்புத்தலமாக வைத்து பாடியிருப்பது உறுதி செய்கிறது. திருவாதிரை விழா சிறப்பாக நடைபெற்று வந்த ஊராக இருந்ததால், ‘திருவாதிரைமங்கலம்’ என்பதே ஊர்ப் பெயராக விளங்கியிருக்கிறது. இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், சிவலோகநாதர், சங்கர நாயகி, பலிபீடம், சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி ஆகிய சிலை வடிவங்கள், பிற்காலச்சோழர் காலமான கி.பி.12, 13-ம் நூற்றாண்டினை சேர்ந்தது என்பதை உறுதி செய்வதாக உள்ளன. இதேபோல, திருப்பணிக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆலயத்தின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன.
இந்த ஆலயம் பிற்காலச் சோழர்களின் கலைநயத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இறைவன் வாழும் கருவறையானது, ஜகதி, பத்மம், குமுதம், வேதிகை, அரைத்தூண்கள், காபோதகம் கொண்டு திகழ்கிறது. கருவறைக்கு மேல் உள்ள விமானம், எண்பட்டைகளைக் கொண்டு, திராவிட வகையைச் சார்ந்த கோவிலாக விளங்குகிறது. இவ்வாலயத்தின் முன்மண்டபம், மகாமண்டபம் ஆகியவை கி.பி.18-ம் நூற்றாண்டில் மராட்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட செங்கல் திருப்பணியை எடுத்துரைக்கிறது.
இந்தக் கோவிலின் திருப்பணிக்காக பூமியைத் தோண்டியபோது, நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையின் உற்சவத் திருமேனிகள் கிடைத்தன. இவை பிற்காலச் சோழர்களின் காலத்தை உறுதி செய்வதாக இருக்கிறது. இந்தச் சிலைகளின் பாதுகாப்பு கருதி, அவை மாநில அரசின் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தில் கிடைத்த துண்டு கல்வெட்டுகளில் இரண்டில் ஒன்று, இத்தலம் ‘திருவாதிரைமங்கலம்’ என்பதையும், இறைவி ‘சங்கரநாயகி’ என்பதையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இக்கல்வெட்டின் முழுப்பகுதிகள் கிடைக்காத நிலையில், இவ்வரிகள் இத்தலத்தினைப் புகழும் பாடல் கல்வெட்டாக இருக்கலாம் என்பது, ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்தத் திருக்கோவில் தொடக்க காலத்தில் செங்கல் தளியாக இருந்து, பின்பு சோழர் காலத்தில் கருங்கல் தளியாக மாற்றம் கண்டிருக்கிறது. இங்கு கிடைத்த கல்வெட்டுகள் கோவில் வளாகத்திற்குள் பாதுகாப்பாக உள்ளன. ஆலயம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
தலவரலாறு
ஏழாம் நூற்றாண்டிலேயே சிறப்பு பெற்று விளங்கிய இந்தத் திருக்கோவில், நெடுங்காலமாக முட்செடிகளாலும், புதர்களால் மறைந்திருந்தது. இந்த ஊரை பூர்வீகமாக கொண்டு, ரெயில்வே தபால் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராதாகிருஷ்ணன் என்ற 82 வயது சிவனடியார், ஆலயத்தின் நிலை கண்டு வருந்தினார். ஆனால் திருப்பணி செய்வதற்கு அவரிடம் பணம் இல்லை. இந்த நிலையில் அவரது மகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தன் மகனிடம், ஆலயத்தை திருப்பணி செய்யும் தன்னுடைய எண்ணம் பற்றி கூறினார். தந்தையின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அவர், அதற்கான பணிகளை மேற்கொண்டார். தனி மனித விருப்பம், முயற்சியில் குடும்பமே தம்மை ஈடுபடுத்திக்கொண்டது. அதன் காரணமாக 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆலயத் திருப்பணி, 2016-ல் முடிவடைந்து, கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனும், இறைவியும், அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது, தன்னை நாடிவரும் அனைவருக்கும் தனது அருளாசியை வழங்கி வருகிறார்கள்.
ஆலய அமைப்பு
திருவாதிரைமங்கலம் என்னும் அழகிய கிராமத்தின் தென்கிழக்கு மூலையில், இந்த ஆலயம் அமைந்துள்ளது. புனரமைப்பில் பழங்கற்கள் பயன்படுத்தப்படாததால், புதுக்கோவில் போல தோற்றம் அளிக்கிறது. என்றாலும், ஆலயத்தின் உள்ளே இருக்கும் மூலமூர்த்திகள், பிற்காலச் சோழர்காலத்தின் கலை நயத்தை உணர்த்துகின்றன. ஆலயத்தின் எதிரே திருக்குளம் காணப்படுகிறது.
எளிய வளைவு கொண்ட நுழைவு வாசல், உள்ளே பலிபீடம், நந்தி சிலையும் நம்மை வரவேற்கின்றன. உள்ளே மகாமண்டபம், இடதுபுறம் விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். வலது புறம் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் தேவ மயிலைக் கொண்டு காட்சி தருகின்றார். நடுநாயகமாக இறைவன் சிவலோகநாதர், வட்ட வடிவ ஆவுடையாராக எளிய தோற்றத்தில், கிழக்கு முகமாய் காட்சி அருள்கிறார். இறைவன் திருமேனி ஒளி வீசும் கோலத்தில் அமைந்துள்ளது.
சுவாமி சன்னிதியின் எதிரே, இடதுபுறம் தெற்கு நோக்கிய அன்னை சங்கர நாயகி சன்னிதி இருக்கிறது. அன்னையும், சிவபெருமானைப் போலவே எளிய வடிவில் கலைநயம் கொண்ட நான்கு கரங்களை கொண்ட திருமேனியராக காட்சி தருகின்றாள். அன்னை நின்ற கோலத்தில், தன்னுடைய மேல் இரண்டு கரங்களில் ருத்ராட்ச மாலை, தாமரை கொண்டும், கீழ் வலது கரத்தால் அபய முத்திரை காட்டியும், இடது கரத்தை இடுப்பில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். அன்னையின் திருமுடி எழிலான மகுடம் தாங்கி இருக்கிறது. கருவறைச் சுற்றில் தெற்கே தட்சிணாமூர்த்தி, வடக்கே துர்க்கை, எதிரில் சண்டி கேசுவரர் காட்சிதர, வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. ஆலயத்தின் உட்புறத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள் பூத்துக் குலுங்குகின்றன.
இத்தலத்தில் பிரதோஷம் வெகு நேர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இது தவிர, திருவாதிரை, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, குருப்பெயர்ச்சி, தீபாவளி, பொங்கல் ஆகிய விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. மாதக் கிருத்திகையை ஊர்மக்கள் தங்களுக்குள் முறைவைத்து கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ஆலயத்தின் தல மரமாக செங்காலி மரம் உள்ளது. தல தீர்த்தமாக ஆலயத்திற்கு எதிரே உள்ள சிவகங்கை தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் மீது, பங்குனி மாதத்தில் முதல் 20 நாட்களில் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் படுவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
இந்த ஆலயத்திற்கு வந்து, இறைவனையும், இறைவியையும் வழிபட்டு செல்பவர்களுக்கு, வாழ்வில் நல்ல பல திருப்பம் உண்டாகும் என்கிறார்கள். மேலும் திருமணத்தடை நீங்கும். நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு குணமாகும் என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
பனையபுரம் அதியமான்
தொன்மைச் சிறப்பு
திருவாதிரைமங்கலம் சோழமன்னர்கள் ஆட்சியில், பனையூர் நாட்டில் அமைந்த ஊராக இருந்துள்ளது. மேலும், இங்கு அமைந்துள்ள தெய்வ வடிவங்கள் அனைத்தும், பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். சிற்பங்கள் சிறிது சேதம் அடைந்திருந்தாலும், அதன் கலைநயம், நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.