ஆன்மிகம்

வரவூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

Published On 2016-04-25 08:24 IST   |   Update On 2016-04-25 08:23:00 IST
கடலூர் வண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் வரவூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 101-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி காளி பூஜை விழா கடந்த 18-ந்தேதி கோ பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினந்தோறும் காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் வீதியுலா காட்சியும், சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.

கடந்த 21-ந்தேதி 101-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி காளி பூஜையும், 22-ந்தேதி சக்ர செடல் தேர் உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் பூச்சொரிதல் உற்சவ வீதியுலா நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு வரவூர் மாரியம்மனுக்கு பக்தர்களின் புஷ்ப அபிஷேக பூஜை நடைபெற்றது.

நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் 108 பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதன்பிறகு விஸ்வரூப சூலத்தம்மனுக்கு 108 பால்குடத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பகல் 12 மணிக்கு மகா தீபாராதனையும், பிரசாத வினியோகமும், மாலை சூலத்தம்மன் வீதியுலா காட்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News