ஆன்மிகம்
வளநாடு அருகே கூத்தாண்ட அரவான் கோவில் கும்பாபிஷேகம்
வளநாடு அருகே கூத்தாண்ட அரவான் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியப்பகுதி, வளநாடு அருகே உள்ள தேனூரில் கூத்தாண்ட அரவான் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கூடிய கோவில் புதிதாக கட்டப்பட்டது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து திருமுறைபாராயணம், மூலமந்திரம், அஸ்தர காயத்திரி ஹோமம், கோபூஜை ஆகியவை நடைபெற்றன. நேற்று காலை இரண்டாம் கால பூர்ணாஹுதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் மூலவருக்கு மஹா அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் வளநாடு, தேனூர், பாலக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர் சுப்ரமணி தலைமையிலான பொதுமக்கள் செய்திருந்தனர்.